You are currently viewing PREECLAMPSIA

PREECLAMPSIA

கர்ப்பகாலம் எப்போதும் சவால்கள் நிறைந்த காலம். இதை கவனமாக எதிர்கொண்டால் பிரசவக்காலமும் ஆரோக்கியமே.கர்ப்பகாலத்தில் உண்டாகும் உடல் மற்றும் மனதில் உண்டாகும் மாற்றங்களை மட்டும் அல்லாமல் ஆரோக்கிய குறைபாட்டையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும். இல்லையெனில் கர்ப்பகாலம் முடிந்து பிரசவக்காலத்தில் சிக்கல் தான் உண்டாகும். கர்ப்பகாலத்தில் மட்டுமே வரக்கூடிய நீரிழிவு ஆகட்டும், உயர் ரத்த அழுத்த நோயாக இருக்கட்டும் இரண்டுமே அலட்சியப்படுத்தகூடியதல்ல.

கர்ப்ப காலத்தில் வரக்கூடிய உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படாமல் இருப்பது, சிறுநீரில் புரதம், கை கால்களில் உண்டாகும் தொடர் வீக்கம்,கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பழுதாகும் நிலை போன்றவை உண்டாகும் போது அது ப்ரீ எக்லாம்சியா என்று அழைக்கப்படுகிறது.
இது ஒவ்வொரு பெண்ணின் உடல் நிலைக்கு ஏற்ப இலேசாகவோ அல்லது கடுமையாகவோ இருக்கும். இந்த ஃப்ரீ எக்லாம்சியாவை கவனிக்க தவறும் போது அது பிரசவக்காலத்தில் எக்லாம்சியாவுக்கு வழிவகுக்கும்.

பெரும்பாலும் இந்த ப்ரீஎக்லாம்சியா எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமல் தாக்கும். ரத்த அழுத்த நிலை 140 க்கு 90 என்னும் அளவை தாண்டக்கூடும். தலைவலி கடுமையாக இருக்கும். தலைச்சுற்றல் வாந்தி போன்றவை இருக்கும். சிறுநீர் குறைந்த அளவு வெளியேறிவிடும்.மூச்சுத்திணறல் இருக்க கூடும். எடை திடீரென்று அதிகரிக்க கூடும். கைகளிலும் கால்களிலும் முகத்திலும் அசாதாரண வீக்கம், வலது மேல் அடிவயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். பரிசோதனையில் சிறுநீரில் புரதமும் சேர்ந்து வெளியேறிவிடும். ஈரல் செயல்பாடு இயல்பற்று இருக்கும், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்.

If you need an expert #Gynecologist Opinion, #AskAshika – Your Friendly Gynecologist in #Tirunelveli

For Consultation:
Phone: +91 9894937345

Dr. Ashika M.B.B.S., M.S(OG)
Adolescent #Gynecology & #Fertility
Management of High-Risk Pregnancy
Complicated Vaginal Deliveries
General Obstetrics and #Gynecology

#hibawomensclinic#gynecologistintirunelvlei#doctorsintirunelveli#pcod#pcos#womendoctors#womenempowerment#womensupportingwomen#womenshealth#pregancycare — in Tirunelveli.

Leave a Reply