எக்ளாம்ப்சியா என்பது கர்பிணிகளுக்கு ஏற்படுகிற ரத்த அழுத்தத்தை குறிக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது ரத்த அழுத்தம் அதிகரிப்பதும், சிறுநீர் வழியாக ப்ரோட்டீன் அதிகளவு வெளியேறுவதையும் தான் ப்ரீக்ளம்ப்சியா என்று குறிப்பிடுகிறார்கள். இது கரு உருவாகி 20வது வாரமோ அல்லது அதற்குப் பிறகு தான் ஏற்படும். ப்ரீகளம்ப்சியா கைமீறி செல்லும் போது ரத்த திட்டுக்களின் அளவு குறைந்திடும். அதே போல கிட்னி மற்றும் கல்லீரலிலும் அதன் தீவிரத்தை காட்டும்.
இரட்டை குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட கருவை சுமப்பவர்கள், 35 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்கள், தலைப்பிரசவம்,உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள், சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் இருப்பவர்கள், நீண்ட நாட்களாக அதற்காக மாத்திரை சாப்பிடுபவர்கள்,கிட்னி பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
கர்பிணிகள் கண்டிப்பாக இந்த அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது அவசியம். எக்ளாம்ப்சியா’ எனப்படும் கொடிய நோய் பிரசவத்திற்கு முன்னரோ அல்லது பிரசவ நேரத்திலோ அல்லது பிரசவத்திற்குப் பின்னரோ ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதிக இரத்த அழுத்தம், சிறுநீரில் புரதப்போக்கு, உடல் வீக்கம், தலைவலி, கிறுகிறுப்பு, பார்வைக் கோளாறுகள், மேல்வயிற்று வலி, வலிப்பு மற்றும் நினைவு இழத்தல் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும். பளிச்சிடும் வெளிச்சம் தெரிவது, வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசுவது அல்லது முழுமையாகக் கண் தெரியாமல் இருப்பது போன்ற பார்வைக் கோளாறுகள் இந்நோயாளிகளுக்கு ஏற்படும். சிலருக்கு வாந்திகூட இருக்கும்.
வலிப்பு முதலில் உடலெல்லாம் மிகவும் விறைப்பாக இருப்பதுபோல ஆரம்பிக்கும். கைகள் மடங்கி விரல்கள் எல்லாம் மடிக்கப்பட்டு கெட்டியாக எதையோ பிடித்திருப்பதைப்போல இருக்கும். பின்னர், உடலில் உள்ள தசைகள் எல்லாம் வெட்டி வெட்டி இழுக்கும். இந்த நிலை ஓரிரு நிமிடங்கள் நீடித்துவிட்டு முழுமையான மயக்க நிலைக்கு தாய்மார்கள் சென்றுவிடுவார்கள். மயக்க நிலைக்குச் சென்று விட்ட தாய்மார்களுக்கு வேகமான சுவாசம் வருவதோடு சிறிது காய்ச்சலும் ஏற்படலாம். ஒரு சிலருக்கு அடிக்கடி வலிப்பு வரலாம். ஆனால், ஒரு சிலரோ மயக்க நிலையிலேயே நீடித்து இருப்பர் பிரசவத்திற்குப்பின் ஏற்படும் எக்ளாம்ப்சியா நோய் பிரசவம் ஆன முதல் இருபத்து நான்கு மணி நேரத்திலேயே ஏற்படும்.
If you need an expert #Gynecologist Opinion, #AskAshika – Your Friendly Gynecologist in #Tirunelveli
For Consultation:
Phone: +91 9894937345
Dr. Ashika M.B.B.S., M.S(OG)
Adolescent #Gynecology & #Fertility
Management of High-Risk Pregnancy
Complicated Vaginal Deliveries
General Obstetrics and #Gynecology