கர்ப்பப்பை இயல்பாகவே நான்கு பக்கமும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதசைகளால் சூழப்பட்டவை. அதனால் தான் ஓர் அங்குல வயிற்றில் குழந்தை வளரும் போது அதற்கேற்ப தசைகள் விரிவடைவதும், பிறகு தனது இடத்துக்குள் சுருங்கி கொள்வதுமாய் இருக்கிறது.
இவை இருக்குமிடத்தில் இருந்து தள்ளி கீழிறிங்கி வருவது தான் கருப்பை இறக்கம் என்று அழைக்கப்படுகிறது. இவை எல்லோருக்கும் வருவதில்லை. 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கம் செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. அதிக குழந்தைகள், பிரசவத்துக்கு பிறகு உடனடியாக அதிக எடைகளை தூக்குவது. அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது. உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து கர்ப்பப்பை இறக்கம் உண்டாகிறது.
கர்ப்பப்பையைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுவிழந்து பலவீனம் அடையும் போது தான் கர்ப்பப்பை இறக்கம் நிகழ்கிறது. அப்போது கர்ப்பப்பை அருகில் இருக்கும் குடல், சிறுநீரகப்பை. மலக்குடல் மூன்றின் அருகில் இருப்பதால் இவை அழுத்தும் போது சிறுநீர் பிரச்சனை உண்டாகிறது.கர்ப்பப்பை இறங்கும் போது அவை சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலை சேர்த்து இழுப்பதால் இடுப்பில் வலி உணர்வு அதிகரிக்கும்.உடலுறவு கொள்ளும் போது யோனி பகுதி அருகில் கர்ப்பப்பை வாய் இறங்கியிருந்தால் அவை அதிக அசெளகரியத்தை உண்டு செய்யும். உடலுறவில் திருப்தியின்மை, உறவு கொள்வதில் சிக்கல், உறவுக்கு பின் ரத்தபோக்கு போன்ற அறிகுறிகள் கூட இதன் காரணமாக இருக்கலாம்.
If you need an expert #Gynecologist Opinion, #AskAshika – Your Friendly Gynecologist in #Tirunelveli
For Consultation:
Phone: +91 9894937345
Dr. Ashika M.B.B.S., M.S(OG)
Adolescent #Gynecology & #Fertility
Management of High-Risk Pregnancy
Complicated Vaginal Deliveries
General Obstetrics and #Gynecology
#hibawomensclinic#gynecologistintirunelvlei#doctorsintirunelveli#pcod#pcos#womendoctors#womenempowerment#womensupportingwomen#womenshealth#pregancycare — Tirunelveli