You are currently viewing ENDOMETRIOSIS

ENDOMETRIOSIS

முன்பு எப்பொதும் இல்லாத அளவுக்குப் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்னைகள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக, ‘ஃபைப்ராய்டு (Fibroid) என்னும் கர்ப்பப்பை தசைநார்க்கட்டி உலக அளவில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்களுக்கு வருவதாக’ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக, `30 முதல் 45 வயதுக்குள்ளேயே கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னை சில சமயங்களில் கருவுறுதலையும் பாதிக்கிறது’.
`குழந்தைப்பேறு இல்லை என்று சிகிச்சைக்கு வரும் பெண்களில் 5-10 சதவிகிதம் பேருக்கு குழந்தையின்மைக்குக் காரணமாக இருப்பது கர்ப்பப்பையில் காணப்படும் நார்த்திசுக் கட்டிகள்தான். இந்தப் பிரச்னைக்கென்று பிரத்யேக அறிகுறிகள் இல்லாததால், ஏதாவது பிரச்னைக்காக ஸ்கேன் செய்யும்போதுதான் ஃபைப்ராய்டு கட்டிகள் இருப்பது தெரிய வருகிறது” என்கிறார்.
கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய தசைநார்க் கட்டிக்கு ஃபைப்ராய்டு என்று பெயர். இந்தக் கட்டி கர்ப்பப்பையின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். அது தோன்றும் இடத்தைப் பொருத்து கட்டிகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். கர்ப்பப்பையின் வெளிப்புறச் சுவரில் வரக்கூடிய கட்டிக்கு `சப்செரோசல் ஃபைப்ராய்ட்ஸ்’ (Subserosal Fibroids) என்றும், கர்ப்பப்பையின் வெளி மற்றும் உட்சுவருக்கு இடைப்பட்ட தசைப்பகுதியில் ஏற்படக்கூடிய கட்டிக்கு `இன்ட்ராமியூரல் ஃபைப்ராய்ட்ஸ்’ (Intramural Fibroids) என்றும், கர்ப்பப்பையின் உட்சுவர் பகுதியில் வரும் கட்டி `சப்மியுகோசல் ஃபைப்ராய்ட்ஸ்’ (Submucosal Fibroids) என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் சப்செரோசல் ஃபைப்ராய்ட்ஸ், இன்ட்ராமியூரல் ஃபைப்ராய்ட்ஸ் கட்டிகள் வருவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. சப்மியுகோசல் ஃபைப்ராய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.

அறிகுறிகள் என்னென்ன?
ஃபைப்ராய்டுகள் பொதுவாக அறிகுறிகள் எதையும் காட்டுவதில்லை. சிலருக்கு மாதவிடாயின்போது வயிற்றுவலியும் ரத்தப்போக்கும் மிக அதிகமாக இருக்கும். அதிக நாள்களுக்கு மாதவிடாய் நீடிப்பதும் ஃபைப்ராய்டு கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்.

பெரிய கட்டியாக இருப்பின் அருகிலிருக்கும் உறுப்பில் அழுத்தம் ஏற்பட்டு, அதனால் சில தொந்தரவுகள் ஏற்படலாம். குறிப்பாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, மலச்சிக்கல் ஏற்படலாம். சிலருக்கு எந்தத் தொந்தரவும் அறிகுறிகளும் இல்லாமலேயே குழந்தைப்பேறு தடைப்படலாம்.

If you need an expert #Gynecologist Opinion, #AskAshika – Your Friendly Gynecologist in #Tirunelveli

For Consultation:
Phone: +91 9894937345

Dr. Ashika M.B.B.S., M.S(OG)
Adolescent #Gynecology & #Fertility
Management of High-Risk Pregnancy
Complicated Vaginal Deliveries
General Obstetrics and #Gynecology

#hibawomensclinic#gynecologistintirunelvlei#doctorsintirunelveli#pcod#pcos#womendoctors#womenempowerment#womensupportingwomen#womenshealth#pregancycare — in Tirunelveli.

Leave a Reply